வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரி காட்டுப் பகுதியில், நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த செயல்பாட்டு நிலையில் இருந்த இரண்டு கைத்துப்பாக்கிகளை கொழும்பு மத்திய ஊழல் தடுப்பு விசேட பிரிவு மீட்டுள்ளது. பொலிஸ்மா அதிபரின் நேரடி மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனை நடவடிக்கையின் போது, ஒரு மைக்ரோ ரக துப்பாக்கி (4 ரவைகளுடன்) மற்றும் இத்தாலி தயாரிப்பான ஒரு ரிவோல்வர் துப்பாக்கி ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த ஆயுதங்கள் குற்றம் புரியும் நோக்கத்துடன் மறைத்து வைக்கப்பட்டிருந்ததா என்பது குறித்து வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply