அண்மையில் நாட்டில் ஏற்பட்ட அனர்த்தப் பேரழிவுச் சம்பவத்தைப் பயன்படுத்தி, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB), ஆளும் தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான சூழ்ச்சிகளில் ஈடுபடாது என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் பேசிய அவர், “தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த நாட்டை ஐந்து வருடங்களுக்கு ஆள வேண்டும். தமது பொறுப்பை நிறைவேற்றாமல் அவர்கள் தப்பிச் செல்ல முடியாது. நாம் இந்த ஆட்சியைக் கவிழ்க்கச் சூழ்ச்சி செய்யவில்லை” என்று தெரிவித்தார். மேலும், தேசிய மக்கள் சக்தி எதிரணியில் இருந்திருந்தால் இந்த அனர்த்த நேரத்தில் என்ன நடந்திருக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Share.
Leave A Reply