இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட கடும் மண்சரிவு மற்றும் வெள்ளப் பேரழிவுகளுக்கு பதிலளிக்கும் வகையில், ஐரோப்பிய ஒன்றியம் (EU) அவசரமாக 1.8 மில்லியன் யூரோ ($1.8 Million Euro) நிதியுதவியை விடுவித்துள்ளது. மிகவும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அத்தியாவசிய நிவாரணங்களை வழங்குவதற்காக இந்த நிதி பயன்படுத்தப்படும்.
இந்த நிதிக்கு மேலதிகமாக, ஜேர்மனி 4,600 தங்குமிடப் பொருட்களையும், பிரான்ஸ் 3,400 பொருட்களையும் வழங்கியுள்ளன. அத்துடன், இத்தாலி பொறியியல் நிபுணர்கள் குழுவை அனுப்பியுள்ளதுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்கைக்கோள் சேவைகள் மூலம் இதுவரை 30 பேரிடர் வரைபடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

