டிட்வா சூறாவளியின் தாக்கத்தால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக, இலங்கையின் கடற்கரைப் பகுதிகளில் மொத்தம் 143.03 கிலோமீற்றர் தூரம் அளவிற்கு பிளாஸ்டிக் மற்றும் பிற கழிவுகளால் மாசுபட்டுள்ளதாக கடற்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை (MEPA) தெரிவித்துள்ளது.

கொழும்பு, நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம், கற்பிட்டி மற்றும் கிழக்கு மாகாணத்தின் கடற்கரைப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குவிந்துள்ள இந்தக் கழிவுகளை அகற்ற குறைந்தது மூன்று வாரங்களும், 5,280 மனித மணிநேரங்களும் தேவைப்படும் என MEPA தலைவர் சமந்த குணசேகர தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி நிறுவனங்களின் உதவியுடன் இந்தக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply