தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் பொரலஸ்கமுவ நகரசபை உறுப்பினர் லலானா பிரியதர்ஷனி முச்சக்கரவண்டியில் பயணித்தபோது, அதன் சாரதி அவரது கைப்பையைத் திருடிச் சென்றுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் (டிசம்பர் 8) இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.

திருடப்பட்ட கைப்பையில், சுமார் மூன்று இலட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கக் காதணிகள், 35,000 ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன், 15,000 ரூபாய் பணம் மற்றும் பல மதிப்புமிக்க ஆவணங்கள் இருந்ததாகவும், இது தொடர்பில் தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply