கட்டான, கிம்புலப்பிட்டியவில் அமைந்துள்ள பட்டாசு உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில், பலத்த காயமடைந்த பண்டாரவளையைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் அந்தத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவரின் சடலம் நீர்கொழும்பு மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply