இலங்கையில் ஏற்பட்ட தித்வா சூறாவளியைத் தொடர்ந்து, மலையகப் பகுதிகளில் மண்சரிவு அபாயம் நீடித்து வருகின்றது. இதன் காரணமாக மக்கள் அச்சத்தில் வாழும் நிலையில், பதுளை எகரிய, மீகொல்ல மேல் பகுதியில் இன்று அதிகாலையில் பாரிய மண்சரிவு ஒன்று ஏற்பட்டுள்ளது.

இதனால் அச்சமடைந்த அந்தப் பகுதி மக்கள் அதிகாலை 4 மணியளவில் பாதுகாப்பைத் தேடி விளையாட்டு மைதானத்தில் தஞ்சமடைந்துள்ளனர். வெளியேற்றும் முயற்சிகள் இருந்தபோதிலும், சில குடும்பங்களால் பாதுகாப்பு மையங்களை அடைய முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மண்சரிவில் எந்தவிதமான உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply