அநுராதபுரத்தைச் சேர்ந்த கருப்பையா சிவகுமார் (வயது 35) என்ற ஒரு பிள்ளையின் தந்தை, யாழ்ப்பாணம் நோக்கி வந்த பேருந்தில் இருந்து கீழே விழுந்து, சிகிச்சை பலனின்றி நேற்றிரவு (டிசம்பர் 9) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த இவர், பேருந்து செம்மணிப் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, மிதிபலகையில் நின்றவாறு முகம் கழுவ முயன்றிருக்கிறார். பேருந்து வளைவில் திரும்பியபோது நிலைதடுமாறி கீழே விழுந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
Related Posts
Add A Comment

