‘மொட்டுக் கட்சியின்’ தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி., அனர்த்த நிவாரணப் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்வதற்கு, இறுதிப் போருக்குப் பின்னான மீள் குடியேற்றம் மற்றும் சுனாமி மீட்பு நடவடிக்கைகள் குறித்த கடந்தகால அனுபவங்களை அரசாங்கம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

நேற்று (டிசம்பர் 10, 2025) ஊடகங்களிடம் பேசிய அவர், “2009 ஆம் ஆண்டு போருக்குப் பின்னர், வடக்கில் முகாம்களில் இருந்த பாரிய மக்கள் தொகையைச் சொந்த இடங்களில் மீளக் குடியேற்றவும், சுனாமியால் அழிவடைந்த வர்த்தகத்தை மீட்டெடுக்கவும் குறுகிய காலத்தில் பாரிய திட்டங்கள் வெற்றிகரமாகச் செயற்படுத்தப்பட்டன.” என்றார்.

மேலும், “76 வருட சாபங்களைப் பேசி வைராக்கியத்துடன் செயற்படுவதில் எந்த நன்மையும் இல்லை. கடந்த காலங்களில் ஏற்பட்ட அனர்த்தங்களின் போது அரசாங்கம் செயற்பட்ட விதத்தை ஆராய்ந்து, எந்நேரமும் குறையைப் பேசாமல் மக்களை விரைவாக மீளக் குடியேற்றம் செய்ய வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Share.
Leave A Reply