‘நீ வருவாய் என’, ‘விண்ணுக்கும் மண்ணுக்கும்’ போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் ராஜகுமாரன், தனது மனைவி நடிகை தேவயானி குறித்துப் பேசிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவர் அளித்த பேட்டியில், “நான் தேவயானியைத் திருமணம் செய்வதற்கு முன்பு ஒரு வீட்டில் வெறும் ரூ. 1000 வாடகையில் குடியிருந்தேன். அப்போது சிறுகச் சிறுகச் சேகரித்து வைத்திருந்த ரூ. 3 லட்சம் பணம் எனக்கு உதவியது. ஏனென்றால், தேவயானி திருமணமாகி வந்தபோது வெறும் கையை வீசிக் கொண்டு என்னை நம்பி வந்தார். சினிமாவில் சொல்வது போல் உடுக்க துணி கூட இல்லாமல் அவர் வந்தார்” என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply