கட்டுநாயக்க அதிவேக வீதியில் (Expressway) பயணித்த வேளையில், வீதியில் குப்பைப் பையை வீசிய குற்றத்திற்காக, யாழ்ப்பாணம், அல்வாயைச் சேர்ந்த 35 வயதுடைய வான் சாரதி ஒருவர் நேற்று (டிசம்பர் 10) மதியம் கைது செய்யப்பட்டார்.
சீதுவ பொலிஸ் எல்லைக்குட்பட்ட 19 கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதிவேக நெடுஞ்சாலையில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் இதனை அவதானித்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அந்த நபர், இன்று (டிசம்பர் 11) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

