பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில், வெளியேற்றப்பட்ட ஆதிரை மீண்டும் வீட்டிற்குள் வந்த பிறகு, FJ-ஐ குறிவைத்துத் தாக்கி வருகிறார். “நீ என்னை மிஸ் யூஸ் செய்துவிட்டாய்” என்று அவர் FJ-யிடம் சண்டையிட்டு வருகிறார்.

மத்தியஸ்தம் போட்டி நடந்தபோது FJ பேசுகையில், “ஆதிரைதான் என்னிடம் முத்தம் கேட்டாள். என்னிடம் ஒரு பெண் முத்தம் கேட்கும்போது, அதுவும் நெருங்கிப் பழகும் பெண் கேட்கும்போது அதை ‘லவ்’ என்றுதானே நினைக்கத் தோன்றும். அப்படித்தான் நான் நினைத்துக் கொண்டேன்” என்று விளக்கம் அளித்தார்.

இதற்குப் பதிலளித்த ஆதிரை, தான் விக்ரமிடம் கூடச் சாதாரணமாகத்தான் ஒரு அணைப்பை (Hug) கேட்டதாகவும், அதுபோலத்தான் இந்த முத்தமும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இறுதியில் FJ தனது புரிதல் தவறு என்று மன்னிப்பு கேட்க, இதைப்பார்த்த ரசிகர்கள், ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ திரைப்படத்தில் சிம்பு, “இது லவ் தானே ஜெஸ்ஸி” என்று நினைத்தது போல் FJ-யும் நினைத்துவிட்டார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Share.
Leave A Reply