1950கள் முதல் 70கள் வரை இந்தி, பெங்காலி உட்பட பல மொழிகளில் புகழின் உச்சியில் இருந்த நடிகை மாலா சின்ஹா, ஒரு காலத்தில் ஆண் நடிகர்களுக்கு இணையாகச் சம்பளம் வாங்கிய லேடி சூப்பர்ஸ்டாராகத் திகழ்ந்தார். வருமானத்துக்கு அதிகமாகச் சம்பாதித்த பணத்திற்கு கணக்கு காட்டப் பயந்து, தன் குளியலறை சுவருக்குள் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை மூட்டை மூட்டையாகப் பதுக்கி வைத்ததாகக் கூறப்படுகிறது.
இந்தத் தகவல் கசிந்ததைத் தொடர்ந்து, 1974 ஆம் ஆண்டு வருமான வரிச் சோதனை (Income Tax Raid) நடத்தப்பட்டு, பதுக்கப்பட்ட பணம் கைப்பற்றப்பட்டது. அதிகாரிகள் பணத்தின் ஆதாரம் குறித்துக் கேட்டபோது, யாரோ அறிவுறுத்தியதன் பேரில், ‘தான் பாலியல் தொழில் செய்து சம்பாதித்ததாக’ மாலா சின்ஹா பொய்யான வாக்குமூலம் அளித்துள்ளார். ஒரு கதாநாயகி பகிரங்கமாக இத்தகைய அறிவிப்பை வெளியிட்டதால், அவரது நற்பெயருக்குப் பெரும் களங்கம் ஏற்பட்டு, குடும்பபாங்கான படங்களில் நடித்து வந்த அவரது முழு சினிமா வாழ்க்கையும் ஒரே இரவில் முடிவுக்கு வந்தது எனப் பத்திரிகையாளர் சேகுவாரா தெரிவித்துள்ளார்.

