கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த், சௌந்தர்யா, மற்றும் ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் 1999ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘படையப்பா’ திரைப்படம், 25 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.

நாளை (டிசம்பர் 12) சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு திரையிடப்படவுள்ள இந்தப் படத்திற்கான முன்பதிவு அமோகமாக நடைபெற்று வருகிறது. இதுவரை ரூ. 85 இலட்சத்திற்கும் அதிகமாக முன்பதிவு மூலம் வசூல் ஆகியுள்ளது. இதற்கு முன் ரீ-ரிலீஸான விஜய்யின் ‘கில்லி’ திரைப்படம் முதல் நாளில் ரூ. 3.5 கோடி வசூல் செய்த நிலையில், ‘படையப்பா’ அந்தச் சாதனையை முறியடிக்க அதிக வாய்ப்புள்ளதாகப் பேசப்படுகிறது.

Share.
Leave A Reply