ஈழத்தின் புகழ்பெற்ற திருமுறிகண்டி பிள்ளையார் ஆலய நிதியமானது, முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் ரூபா 4.08 மில்லியன் பெறுமதியான உலர் உணவு நிவாரணத்தை வழங்கியுள்ளது.
திருமுறிகண்டி ஆலய சூழலில் உள்ள திருமுறிகண்டி, இந்துபுரம், பனிக்கன்குளம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் வாழும் 874 குடும்பங்களுக்கு இந்த உலர் உணவுப் பொதிகள் நேற்று முன்தினம் வழங்கப்பட்டுள்ளது. இந்த உயரிய பங்களிப்பு, அந்த ஆலயத்தின் சமூகப் பொறுப்புணர்வையும், மனிதாபிமானத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

