யாழில் தீ விபத்தில் இளம் குடும்பப் பெண் பலி
யாழ்.போதனா வைத்தியசாலையில் தீக்காயங்களுடன் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந் துள்ளார்.
உயிரிழந்தவர் பருத்தித்துறை ஐயனார் வீதியை சேர்ந்த நித்தில வர்மன் நிசாந்தினி என்ற இரு பிள்ளைகளின் தாயாரான ஆசிரியை ஆவார்.
தீயில்எரிந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனும திக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச் சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் புதன் கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மரணம் தொடர்பில் யாழ்.போதனா வைத்திய சாலை திடீர் மரண விசா ரணை அதிகாரி திருமதி அன்ரலா வின்சன்தயான் விசாரணைகளை மேற் கொண்டார்.
இதன்போது கறையானுக்கு ஸ்பிறே மூலம் மண்ணெண்ணெய்
விசிறியதாகவும் பின்னர் நுளம்பு திரியை ப ற்ற வைத்தபோது ஆடையில் தீ பற்றியதாகவும் தெரிவிக் கப்பட்டது.
சாட்சிகளை பருத்தித் துறை பொலிசார் நெறிப்ப டுத்தினர்.

