யாழ்ப்பாணம் பொன்னாலைப் பகுதியில் மூன்று வயதுச் சிறுவனுக்கு காயங்களில் மிளகாய்த் தூள் பூசி சித்திரவதை செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த நிகழ்வு சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு திருமணமான தந்தையின் இரண்டாவது மனைவியின் குழந்தை

சம்பவம் தொடர்பில் வெளியாகிய தகவலின்படி, குழந்தையின் தந்தை இரண்டு திருமணம் செய்தவர். அவரின் இரண்டாவது மனைவியிடமிருந்து பிறந்த குழந்தைக்கே இப்படியான கொடூரமான சித்திரவதை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்ச்சியாக தாக்குதல்; காயங்களில் மிளகாய்

பெற்றோரான தாய் மற்றும் தந்தை தொடர்ந்து குழந்தையை கொடூரமான முறையில் தாக்கி வந்துள்ளார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக குழந்தையின் உடலில் பல்வேறு காயங்கள் ஏற்பட்டுள்ளன.

அந்த காயங்களின் மீது மிளகாய்த் தூள் பூசியதும், மேலும் குழந்தைக்கு மிளகாய் உண்ண கொடுத்ததுமாக அதிர்ச்சிகரமான விவரங்கள் வெளியாகியுள்ளன.

சங்கானை பிரதேச செயலகம் – வட்டுக்கோட்டை பொலிஸார் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது

இச்சம்பவம் தொடர்பில் குழந்தை மீது சித்திரவதை நடைபெற்று வருவதாகக் கூறி, தகவல் சங்கானை பிரதேச செயலகத்திற்கு வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, செயலக அதிகாரிகள் இந்த விடயத்தை வட்டுக்கோட்டை பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் – பெற்றோர் தப்பியோட்டம்

கிராமசேவகர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவம் இடம்பெற்ற வீட்டிற்கு சென்றபோது, குழந்தையின் தாயும் தந்தையும் வீட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

குழந்தை மீட்பு – பெற்றோருக்கான தேடுதல் நடவடிக்கை

குழந்தை தற்போது பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
தாய், தந்தையை கண்டறிந்து கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பிரதேச செயலக அதிகாரிகளும், பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply