ன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 75வது பிறந்தநாள். ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.
ரஜினியின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் உருவான ‘படையப்பா’ திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்துள்ளனர். இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, லட்சுமி, மணிவண்ணன் மற்றும் நாசர் ஆகியோர் நடித்திருந்தனர்.
1999ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன இப்படத்தை 25 ஆண்டுகள் கழித்து மறுவெளியீடு செய்துள்ளனர்.
ப்ரீ புக்கிங் தகவலின் படி, ‘படையப்பா’ ரீ ரிலீஸ் படம் மட்டும் ரூ. 3 கோடி வசூல் செய்துள்ளது. இது ஒரு ரீ ரிலீஸ் படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் வரவேற்பாகும் என்று விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

