கொழும்பு – கட் டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் குப்பைகளை வீசிய யாழ்ப்பாணத்தை சேர் ந்த வாகன
சாரதி நெடுஞ்சாலை பொலிஸ் பிரிவின் சீதுவ
துணைப் பரிபாலன நிலைய அதிகாரிகளால் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அதிவேக வீதி யின் 19வது கிலோமீற்றர் மைல்கல் அருகே, கொழும் பில் இருந்து கட்டுநாயக்க நோக்கிச் சென்ற பயணி களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்றின் சாரதி, குப்பை
அடங்கிய ஒரு பையை அதி வேக வீதியில் எறிவதை அங்கு நடமாடும் சோதனை யில் ஈடுபட்டிருந்த இருந்த அதிகாரிகளால் அவதானிக் கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த அதி காரிகள் உடனடியாக சீதுவ துணைப் பரிபாலன நிலை யத்திற்கு தகவல் அளித் துள்ளனர்.

அங்கு கடமை யில் இருந்த அதிகாரிகள், அதிவேக வீதிச் சட்டத்தின்கீழ் வீதியில் குப்பைகளை வீசிய குற்றச்சாட்டின் பேரில் குறித்த சாரதியைக் கைது செய்து, மேலதிக நடவடிக் கைக்காக சீதுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத் துள்ளனர்.

கைதானவர் யாழ்ப்பாணம், அல்வாய் பகுதியைச் சேர்ந்த 35 வய துடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

 

Share.
Leave A Reply