அத்தனகடவல பிரதேசத்தைச் சேர்ந்த நபர் கடந்த 9ஆம் திகதி தனது மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, தியபெதும பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவில் பணியாற்றிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் வாகன வருமான உத்தரவு பத்திரம் இல்லை என்றும், அதிகாரிகளுக்குத் தெரியவந்தது. ஆனால், சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல், அதிகாரிகள் அந்த ஆவணங்களை தம்வசம் எடுத்தனர். அதற்குப் பதிலாக, 5,000 ரூபா பணத்தை இலஞ்சமாக கோரினர்.
இதையடுத்து, குறித்த இரண்டு அதிகாரிகளும் நேற்று (11) காலை புலனாய்வு ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் ஹிங்குராக்கொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

