இந்தியாவில் H-1B விசாவிற்கு விண்ணப்பித்தவர்கள் இந்த மாதம் (டிசம்பர்) நடைபெறவிருந்த நேர்காணல்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதனால் ஆயிரக்கணக்கான விண்ணப்பதாரர்கள் பெரிய அதிர்ச்சியடைந்துள்ளனர். அமெரிக்காவில் வேலை வாய்ப்பை எதிர்பார்த்தவர்கள் இவ்வசனையை எதிர்நோக்கி இருந்த நிலையில், இந்த ஒத்திவைப்பு அவர்களின் கனவுகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

ஏற்கெனவே, அமெரிக்க வெளியுறவு அமைச்சு இந்த மாதத் தொடக்கத்தில், H-1B விண்ணப்பதாரர்களின் சமூக ஊடக கணக்குகளைச் சோதனை செய்யவிருப்பதாக அறிவித்திருந்தது.

மேலும், H-1B விசா கொண்டவர்களுடன் தொடர்புடைய Dependent குடும்ப உறுப்பினர்களின் கணக்குகளும் இதற்குள் சோதனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்தச் சோதனை காரணமாக, இந்திய விண்ணப்பதாரர்கள் தங்கள் பயணத் திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Share.
Leave A Reply