– நவம்பரில் 673.4 மில். டொலர்; 2025 இல் இதுவரை 7.19 பில் டொலர்
வெளிநாட்டில் பணிபுரிவோர், இலங்கைக்கு மேற்கொண்ட பண அனுப்பல் நவம்பர் மாதத்தில் 673.4 மில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இதனை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, 2025 ஜனவரி – நவம்பர் வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பணவனுப்பல் 7.19 பில்லியன் டொலராக பதிவாகியுள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது 20.7 சதவீத அதிகரிப்பு என இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

