தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராகத் திகழ்ந்து தற்போது FEFSI அமைப்பின் தலைவராக இருக்கும் ஆர்.கே. செல்வமணி, அண்மையில் நடைபெற்ற வெப் தொடர் நிகழ்ச்சி ஒன்றில் ஓடிடி தளங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

 ஓடிடி தளங்கள் மீதான குற்றச்சாட்டு

சினிமாத் துறை சந்தித்து வரும் நிதிச் சிக்கல்களுக்கும், நடிகர்களின் சம்பள உயர்வுக்கும் ஓடிடி தளங்களே காரணம் என ஆர்.கே. செல்வமணி குற்றம் சாட்டினார்:

  • சம்பள உயர்வு: “சினிமாவை கெடுத்ததே ஓடிடி தளங்கள் தான். ஓடிடி தளங்கள் வந்த புதிதில் அதிகமான விலையைக் கொடுத்து எங்களைக் கெடுத்துவிட்டீர்கள். சினிமாவை கெடுத்ததில் முதல் பங்கு நீங்கள் தான்.”

  • நஷ்டம்: “ரூ. 10 கோடி சம்பளம் வாங்கிய நடிகருக்கு ரூ. 100 கோடி சம்பளம் கொடுத்து இன்று நஷ்டமாகிறது என்று படத்தை வாங்குவதை நிறுத்திவிட்டீர்கள்.”

  • நடிகர்களின் பிடிவாதம்: “நீங்கள் நிறுத்திவிட்டாலும் சம்பளத்தை உயர்த்தியவர் யாரும் இறங்கி வருவதில்லை. உச்சாணிக் கொம்பிலே அமர்ந்திருக்கிறார்கள், நாங்கள் கீழேயே நிற்கிறோம்.”

  • படப்பிடிப்புச் சிக்கல்: “இப்போது பெரிய படங்களின் சூட் போவதற்கே கஷ்டமாக இருக்கிறது. இதனால் திரைப்பட துறையோடு கலந்து பேசி அதற்கான முடிவை எடுக்க வேண்டும்.”

 ஊடகங்களுக்கு வேண்டுகோள்

சினிமாத் துறை நன்றாக இருந்தால்தான் மற்ற ஊடகங்களும் செழிக்க முடியும் என்று அவர் வலியுறுத்தினார்:

“சினிமா நன்றாக இருந்தால்தான் மற்ற ஊடங்கங்களும் நன்றாக இருக்க முடியும், நாங்கள் படத்தை எடுத்தால் தானே நீங்கல் திரையிட முடியும். இதனால் அனைத்து ஓடிடி தளங்களுக்கும் ஊடகங்களுக்கும் இதன் மூலமாக வேண்டுகோளை வைக்கிறேன்.”

 தனது ‘புலன் விசாரணை’ அனுபவம்

தான் இயக்கிய ‘புலன் விசாரணை’ திரைப்படம் மூலம் அடைந்த வெற்றியை அவர் உதாரணமாகக் குறிப்பிட்டார்:

  • “நான் ‘புலன் விசாரணை’ படத்தினை இயக்கும்போது ஒரு லைட்மேன், டிரைவர் சம்பளத்தைவிட மிகவும் குறைவான சம்பளத்தை வாங்கினேன். சம்பளத்திற்காக நான் வேலை செய்யவில்லை, அந்த படம் என்னுடைய படைப்பு, என் கனவு.”

  • “படத்தின் பட்ஜெட் ஒரு கோடி ரூபாய். என்னை நம்பி தயாரிப்பாளர் என்மீது நம்பிக்கை வைத்துப் படத்தை தயாரித்ததால், அந்த நம்பிக்கை தான் என் சம்பளம் என நினைத்தேன்.”

  • “புலன் விசாரணை வெளியாகும் முன் என் வீட்டு வாடகையைக் கூட கொடுக்க முடியாத சூழல், ஆனால் படம் வெளியாகிய அடுத்தநாள் நான் கோடீஸ்வரனாகிவிட்டேன். அது தான் என் உழைப்புக்கான வெகுமதியாக நான் பார்க்கிறேன்,” என்று ஆர்.கே. செல்வமணி கூறியிருக்கிறார்.

Share.
Leave A Reply