அரச மற்றும் அரச அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள், மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று (16) மீண்டும் திறக்கப்படுகின்றன.
இதற்கமைய, மேல், வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ, வட மத்திய மற்றும் தென் ஆகிய 6 மாகாணங்களில் உள்ள சகல பாடசாலைகளும் இன்றைய தினம் வழக்கம்போல் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கின்றன.
எனினும், அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்களால் அதிகமாக பாதிக்கப்பட்ட ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள 640 பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.
மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் கடந்த டிசம்பர் 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், நிலவிய அனர்த்த சூழ்நிலை காரணமாக பாடசாலைகள் ஆரம்பிப்பது இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.
பாடசாலை தவணை கால அட்டவணை
அதன்படி,
-
மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம்:
டிசம்பர் 16 முதல் டிசம்பர் 22 வரை -
பாடசாலைகளுக்கான விடுமுறை:
டிசம்பர் 23 முதல் டிசம்பர் 28 வரை -
மூன்றாம் தவணையின் மூன்றாம் கட்டம்:
டிசம்பர் 29 முதல் டிசம்பர் 31 வரை
2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணைகள்
-
2026 ஆம் ஆண்டின் முதலாவது பாடசாலைத் தவணையின் முதல் கட்டம்
ஜனவரி மாதம் முதல் திங்கட்கிழமை முதல் ஆரம்பம் -
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்காக
ஜனவரி 10 முதல் ஜனவரி 20 வரை பாடசாலைகளுக்கு விடுமுறை -
முதலாவது தவணையின் இரண்டாம் கட்டம்
ஜனவரி 21 முதல் பெப்ரவரி 13 வரை -
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக
பெப்ரவரி 14 முதல் மார்ச் 2 வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும்
குறித்த கால அட்டவணைகளுக்கு அமைவாக கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

