ஐபிஎல் 2026ஆம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலம் இன்று (டிசம்பர் 16) மதியம் 2:30 மணிக்கு அபுதாபியில் தொடங்குகிறது. 77 இடங்களுக்காக 369 வீரர்கள் ஏலத்தில் போட்டிபோட உள்ளனர். இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியிடம் இரண்டாவது அதிகபட்சமாக ரூ. 43.40 கோடி கைவசம் உள்ளது.
இந்தச் சூழலில், முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா, சர்ஃபராஸ் கானை சென்னை அணி கட்டாயம் தேர்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
-
ரெய்னாவின் கருத்து: “சர்ஃபராஸ் கானின் தற்போதைய ஃபார்ம் அபாரமாக இருக்கிறது. அவரை ஏலத்தில் எடுத்தால், குறைந்தபட்சம் 4 முதல் 6 போட்டிகளில் விளையாடினால் கூட, உங்களுக்கு இரண்டு போட்டிகளில் வெற்றியைத் தேடித் தருவார். சென்னை ஆடுகளத்தில் டெக்னிக் உள்ள வீரர்களே ஜொலிக்க முடியும். சிஎஸ்கே சிஸ்டத்திற்குள் அவர் வந்தால், போட்டியை வெல்வது எப்படி என்பதை அவர் கற்றுக் கொள்வார்.”
-
சர்ஃபராஸின் ஃபார்ம்: சையது முஸ்டாக் அலி தொடரில் 6 போட்டிகளில் 183 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 256 ரன்கள் எடுத்து சிறப்பான ஃபார்மில் உள்ளார்.
-
அடிப்படை விலை: சர்ஃபராஸ் கான் தனது பெயரை அடிப்படை விலையான ரூ. 75 லட்சத்திற்குப் பதிவு செய்துள்ளார்.
இதுவரை ஆர்சிபி, பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்காக விளையாடியுள்ள சர்ஃபராஸ், கடந்த இரண்டு சீசன்களாக ஐபிஎல் தொடரில் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

