2026 ஆம் ஆண்டுக்கான IPL மினி ஏலம் இன்று, டிசம்பர் 16ஆம் தேதி நடைபெற்று வருகிறது.
இந்த ஏலத்தில் 10 அணிகளும் தீவிரமாக போட்டியிட்டு வீரர்களை வாங்கி தங்களது அணிகளை வலுப்படுத்தி வருகின்றன.
இந்த சூழலில், இந்த ஏலத்தையும் சேர்த்து மொத்த ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர்கள் யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே அதிக கவனம் பெற்றுள்ளது. ஐபிஎல் ஜெர்சி
கடந்த 2024 ஐபிஎல் ஏலத்தில், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்ஷெல் ஸ்டார்க்கை கொல்கத்தா அணி ரூ.24.75 கோடிக்கு வாங்கியது.
இது அந்த நேரத்தில் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வெளிநாட்டு வீரர் என்ற சாதனையாக பார்க்கப்பட்டது. அதே காலகட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸை Sunrisers Hyderabad ரூ.20.5 கோடிக்கு வாங்கியதும் பெரிய பேசுபொருளாக இருந்தது.
ஆனால், இந்த சாதனைகளை இன்றைய மினி ஏலம் முறியடித்தது. ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் Cameron Green ஐ, கொல்கத்தா அணி ரூ.25.20 கோடிக்கு ஏலம் எடுத்தது.
இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வெளிநாட்டு வீரராகவும், ஆஸ்திரேலிய வீரராகவும் கிரீன் புதிய சாதனை படைத்தார்.
இலங்கையைச் சேர்ந்த மதிஷா பத்திரனா ரூ.18 கோடிக்கு ஏலம் போனார். இலங்கை வீரர்களில் அதிக விலை பெற்றவராக அவரை மாற்றியது.
இந்திய வீரர்களை எடுத்துக்கொண்டால், 2026 மினி ஏலத்தில் சர்வதேச போட்டிகளில் இன்னும் அறிமுகமாகாத இளம் வீரர்களான கார்த்திக் சர்மா மற்றும் பிரஷாந்த் வீர் ஆகிய இருவரையும் சென்னை சூப்பர் கிங்ஸ் தலா ரூ.14.20 கோடிக்கு வாங்கியது.
உள்நாட்டு போட்டிகளில் மட்டும் விளையாடிய வீரர்களுக்கு இவ்வளவு பெரிய தொகை செலுத்தப்பட்டது ஐபிஎல் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்திய அணி ஜெர்சி
மொத்தமாக ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர்களைப் பார்த்தால், 2025 ஏலத்தில் ரிஷப் பந்த் ஐ Lucknow Super Giants ரூ.27 கோடிக்கு வாங்கியது முதலிடத்தில் உள்ளது.
அதே ஆண்டில் ஸ்ரேயாஸ் ஐயரை, பஞ்சாப் கிங் ரூ.26.75 கோடிக்கு வாங்கியது இரண்டாம் இடத்தில் உள்ளது.
இதனைத் தொடர்ந்து 2026 ஏலத்தில் கேமரூன் கிரீன் ரூ.25.20 கோடி, 2024 ஏலத்தில் மிட்செல் ஸ்டார்க் ரூ.24.75 கோடி, மேலும் 2025 ஏலத்தில் வெங்கடேஷ் ஐயர் ரூ.23.75 கோடிக்கு ஏலம் போனதும், ஐபிஎல் வரலாற்றின் மிகப்பெரிய ஏல சாதனைகளாக பதிவாகியுள்ளது.

