உலகளவில் அதிக வசூல் செய்த திரைப்படமாக இன்று வரை முதலிடத்தில் இருப்பது அவதார். 2009 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் படைத்த பாக்ஸ் ஆபிஸ் சாதனையை, இதுவரை எந்தத் திரைப்படமும் முறியடிக்க முடியவில்லை. கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான அவதார் இரண்டாம் பாகமும் முதல் பாகத்தின் வசூல் சாதனையை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் இரண்டு பாகங்களின் அபார வெற்றியைத் தொடர்ந்து, மூன்றாம் பாகமான ‘அவதார்: Fire and Ash’ திரைப்படம் வருகிற 19 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகியிருக்கும் இப்படத்தை பெரிய திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில், அவதார் 3 திரைப்படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், வெளியீட்டுக்கு முன்பே இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது. இதுவரை நடந்த முன்பதிவின் அடிப்படையில், உலகளவில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், இந்தியாவில் மட்டும் ரூ.10 கோடி முன்பதிவு வசூலை இப்படம் ஈட்டியுள்ளது.
முன்பதிவிலேயே இத்தகைய வரவேற்பைப் பெற்றுள்ள அவதார்: Fire and Ash, வெளியான பிறகு மேலும் பல பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடிக்கும் என திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன. ரசிகர்களின் இந்த பெரும் ஆதரவு, அவதார் பிரபஞ்சத்தின் மீதான ஆர்வம் இன்னும் குறையவில்லை என்பதையே காட்டுகிறது.

