தற்போது பல்வேறு விமர்சனங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் மத்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் உண்மையான உரிமையாளர் விஜய் டிவி அல்ல என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
பிரபல தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ தான் பிக்பாஸ். இதுவரை எட்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்த இந்த நிகழ்ச்சி, தற்போது ஒன்பதாவது சீசனாக ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் ஏழு சீசன்கள் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், கடந்த இரண்டு சீசன்களை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் ஏற்படும் சர்ச்சைகள், போட்டியாளர்களின் நடத்தை, டாஸ்க் அமைப்புகள் உள்ளிட்ட அனைத்திற்கும் முழுப் பொறுப்பு விஜய் டிவிக்கே என பலரும் விமர்சித்து வருகின்றனர். ஆனால் உண்மையில் விஜய் டிவி இந்த நிகழ்ச்சியை தயாரிப்பதில்லை; அது வெறும் ஒளிபரப்பும் (Broadcaster) செய்யும் நிறுவனம் மட்டுமே என்பதே தற்போது வெளிவந்த முக்கிய தகவலாகும்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் உண்மையான தயாரிப்பு உரிமை சர்வதேச ஊடக நிறுவனமான எண்டெமால் ஷைன் (Endemol Shine) நிறுவனத்துக்கே சொந்தமானது. இந்த நிறுவனம் உலகம் முழுவதும் பல நாடுகளில் பிக்பாஸ் உள்ளிட்ட பல ரியாலிட்டி ஷோக்களை உருவாக்கி, அதன் முழு வடிவமைப்பையும் நிர்ணயித்து வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பயன்படுத்தப்படும்:
-
Budget schedule
-
விதிமுறைகள்
-
டாஸ்க்கள்
-
தினசரி நிகழ்ச்சி அமைப்பு
-
ப்ரோமோக்கள்
-
TRP கணக்கீடு
என அனைத்தும் எண்டெமால் ஷைன் நிறுவனத்தின் கட்டுப்பாட்டிலேயே வடிவமைக்கப்படுகின்றன. விஜய் டிவி அந்த நிகழ்ச்சியை தமிழ் ரசிகர்களுக்காக ஒளிபரப்பும் பொறுப்பை மட்டும் ஏற்கிறது.
மேலும் இந்த நிறுவனம் Zee News, Hindutamil.in, Shine Group உள்ளிட்ட பல ஊடக மற்றும் துணை நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. உலகளவில் ரியாலிட்டி ஷோக்கள் தயாரிப்பதில் முன்னணி நிறுவனமாக எண்டெமால் ஷைன் கருதப்படுகிறது.
விஜய் டிவியில் பிரபலமான பலர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதால், இது முழுக்க விஜய் டிவி நடத்தும் நிகழ்ச்சி என்ற எண்ணம் மக்களிடையே உருவாகி வருகிறது. அதேபோல், நிகழ்ச்சியில் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் முன்பே திட்டமிடப்பட்டவை என்ற குற்றச்சாட்டுகளும் அடிக்கடி எழுகின்றன. ஆனால் இது ஒரு ரியாலிட்டி ஷோ என்பதால் முழுமையான ஸ்கிரிப்ட் இல்லை என்றும், சில கட்டுப்பாடுகள் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த உண்மைகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

