உலகின் முதல் உண்மையான பறக்கும் கார் என அழைக்கப்படும் Alef Model A Ultralight 2 தற்போது உற்பத்திக்கு தயாராகியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த Alef Aeronautics நிறுவனம் இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த பறக்கும் கார், இறக்கைகள் இல்லாமலே நிற்கும் இடத்திலிருந்து (Vertical Take-Off) பறக்கக்கூடியது என்பதுடன், சாதாரண காரைப் போல நான்கு சக்கரங்களுடன் சாலையில் பயணிக்கவும் முடியும். இதன் காரணமாகவே, இதை உலகின் முதல் “உண்மையான” பறக்கும் கார் என தொழில்நுட்ப உலகம் கருதுகிறது.
சிறப்பம்சங்கள்
-
முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் கார்
-
ஒரே முறை சார்ஜ் செய்தால்
-
சாலையில் 350 கிலோமீட்டர் வரை பயணம்
-
வானில் 170 கிலோமீட்டர் வரை பறக்கும் திறன்
-
-
நகர போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் வடிவமைப்பு
-
சிறிய இடத்திலிருந்து take-off மற்றும் landing செய்யக்கூடிய தொழில்நுட்பம்
சந்தைக்கு வருவது எப்போது?
இந்த பறக்கும் கார் முதலில் குறிப்பிட்ட சில நபர்களுக்கே வழங்கப்படவுள்ளதாகவும், அதன் பின்னர் விரிவான சோதனைகள் முடிந்த பின் பொது சந்தைக்கு கொண்டு வரப்படும் என்றும் Alef Aeronautics நிறுவனம் தெரிவித்துள்ளது.
விலை விவரம்
Alef Model A Ultralight 2 பறக்கும் காரின் விலை சுமார் ரூ. 2.7 கோடி (இந்திய ரூபாய் மதிப்பில்) என அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தக்கூடிய இந்த பறக்கும் கார், எதிர்காலத்தில் மனிதர்களின் பயண முறையை முற்றிலும் மாற்றும் தொழில்நுட்பமாக பார்க்கப்படுகிறது.

