இந்தோனேசியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தடுப்புக் காவலில் உள்ள பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவன் ‘கெஹெல்பத்தர பத்மே’ அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பெரும் ஆயுதக் குவியல் மீட்கப்பட்டுள்ளது.
விசாரணையில் கிடைத்த தகவலின்படி, எந்தேரமுல்ல பகுதியில் உள்ள ஒரு குறுக்கு வீதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த அறையைச் சோதனையிட்டபோது:
-
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு பிஸ்டல் (Pistol).
-
T-56 ரகத் துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் 2 மெகசின்கள்.
-
267 தோட்டாக்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
வெளிநாட்டில் உள்ள மற்றொரு குற்றவாளியின் பராமரிப்பில் இந்த ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் (STF) உதவியுடன் CID அதிகாரிகள் இந்தத் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்து, ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

