ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் (Bondi Beach) கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) யூதர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
தாக்குதல் நடத்தியவர்கள்: 50 வயதான சஜித் அக்ரம் மற்றும் அவரது மகன் 24 வயதான நவீத் அக்ரம் ஆகிய இருவரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் சஜித் அக்ரம் பொலிஸாரின் பதில் தாக்குதலில் உயிரிழந்தார்.
-
இந்தியப் பின்னணி: சஜித் அக்ரம் இந்தியாவின் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் பூர்விகமாகக் கொண்டவர் என இந்திய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். 1998-ல் மாணவர் விசாவில் ஆஸ்திரேலியா சென்ற அவர், இந்திய பாஸ்போர்ட்டையே பயன்படுத்தி வந்துள்ளார்.
-
பின்னணி விபரங்கள்: இவரது தந்தை ஐக்கிய அரபு அமீரக ராணுவத்தில் பணியாற்றியவர். சஜித் கடைசியாக 2022-ல் ஹைதராபாத் வந்து சென்றுள்ளார். முன்னதாக இவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் எனத் தகவல் பரவியிருந்த நிலையில், தற்போது இவர் இந்தியர் என்பது உறுதியாகியுள்ளது.
-
பாதிப்பு: இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழந்ததுடன், பொலிஸார் மற்றும் குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.
சஜித் அக்ரம் குறித்த மேலதிக தகவல்களைத் திரட்ட ஆஸ்திரேலிய அதிகாரிகள் இந்திய அதிகாரிகளுடன் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

