அமெரிக்காவின் குடிவரவு கொள்கைகளை மேலும் கடுமைப்படுத்தும் வகையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாலஸ்தீனம், சிரியா உள்ளிட்ட ஆறு நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவுக்குள் பிரவேசிப்பதற்கு பயணத் தடை விதித்துள்ளார்.

வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, குடிவரவு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே நடைமுறையில் உள்ள பயணத் தடையை மேலும் விரிவுபடுத்த அமெரிக்கா தீர்மானித்துள்ளது.

அதன்படி,

  • பாலஸ்தீனம்

  • புர்கினா பாசோ

  • மாலி

  • நைஜர்

  • தெற்கு சூடான்

  • சிரியா

ஆகிய ஆறு நாடுகள் அமெரிக்க பயணத் தடை விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஜூன் மாதத்தில் பெயரிடப்பட்ட நாடுகளுக்கு மேலதிகமாகவே இந்த புதிய நாடுகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த முடிவு உலக அரசியல் மற்றும் மனிதாபிமான வட்டாரங்களில் பரவலான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply