புதிதாக வெளியாகும் திரைப்படங்களுக்கு இணையாக, ரீ–ரிலீஸ் செய்யப்படும் பழைய ஹிட் படங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வரிசையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படையப்பா திரைப்படத்தின் ரீ–ரிலீஸ் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
இதற்கு முன்பு ரீ–ரிலீஸான கில்லி, சச்சின், அட்டகாசம் போன்ற திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் சிறப்பான வசூலை குவித்த நிலையில், கடந்த வாரம் மீண்டும் திரையரங்குகளில் வெளியான படையப்பா படத்திற்கும் ரசிகர்கள் திரளாக ஆதரவு அளித்துள்ளனர்.
வசூல் நிலவரம்
தகவல்களின் படி, ரீ–ரிலீஸ் செய்யப்பட்டு ஐந்து நாட்களை கடந்துள்ள படையப்பா திரைப்படம் உலகளவில் ரூ.16 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
முதல் மூன்று நாட்களில் மட்டும் ரூ.15 கோடி வரை வசூல் கிடைத்த நிலையில், கடந்த இரண்டு நாட்களில் வசூல் சற்று குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இனி வரும் நாட்களில் படையப்பா மேலும் எவ்வளவு வசூல் செய்யும் என்பதும், முன்னதாக ரீ–ரிலீஸில் வசூல் சாதனை படைத்த கில்லி திரைப்படத்தின் சாதனையை முறியடிக்குமா என்பதும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

