பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், போட்டியாளர் சாண்ட்ராவின் செயல்பாடுகள் தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. கண்ணீர் நாடகத்தின் மூலம் தன்னை பாதிக்கப்பட்டவராக காட்ட முயற்சிப்பதாக கூறி, கானா வினோத் அவரின் ரகசிய ஆட்டத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
20 போட்டியாளர்களுடன் ஆரம்பமான பிக்பாஸ் சீசன் 9, தற்போது பல சர்ச்சைகளுக்கு மத்தியில் 12 வாரங்களை கடந்து செல்கிறது. வீட்டுக்குள் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் நடந்து கொள்கிற விதம், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கப்படும் இந்த நிகழ்ச்சிக்கு பொருத்தமற்றதாக உள்ளது என ரசிகர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இதுவரை பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன், துஷார், பிரவீன், நடிப்பு அரக்கன் திவாகர், கெமி, பிரஜன், ரம்யா ஜோ மற்றும் வியானா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், இடையில் நான்கு வைல்ட் கார்ட் போட்டியாளர்களும் வீட்டுக்குள் அனுப்பப்பட்டனர். கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் ரம்யா ஜோ மற்றும் வியானா வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து, அவர்களுடன் கூட்டணி வைத்திருந்த சாண்ட்ரா தனிமையாகியுள்ளார்.
ஆரம்பத்தில் திவ்யாவுடன் நெருக்கமாக இருந்த சாண்ட்ரா, தற்போது அவருக்கு எதிராக மாறி பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. விக்ரமிடம் சென்று திவ்யா குறித்து பொய்யான கருத்துகளை பகிர்ந்து, அவருக்கு எதிரான மனநிலையை உருவாக்க முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில், விக்ரமிடம் பேசும் போது கானா வினோத்,
“பிக்பாஸ் வீட்டிலுள்ள அனைவரும் தங்களுடைய விளையாட்டை விளையாட வந்திருக்கிறார்கள். ஆனால் சாண்ட்ரா, கண்ணீரை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, திவ்யா மீது அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறார்”
என சாண்ட்ராவின் ரகசிய ஆட்டத்தை புட்டு புட்டு வைத்துள்ளார்.
இந்த சம்பவங்களை வெளியில் இருந்து கவனித்து வரும் முன்னாள் போட்டியாளர் பிரஜனும், திவ்யாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறு, சாண்ட்ராவின் செயல்பாடுகள் தொடர்பான சர்ச்சைகள் இன்றைய தினத்திற்கான பிக்பாஸ் ப்ரோமோவில் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

