மற்றவர்களின் பலம், பலவீனங்களை எடைபோடத் தெரிகிற சான்ட்ராவிற்கு, தான் இப்படி பொழுது பூராவும் ஒப்பாரிக் கோலத்தில் இருந்தால் பார்வையாளர்கள் எரிச்சலடைவார்கள் என்பது மட்டும் தெரியாதா?!
கடிகார டாஸ்க்கையும் டான்ஸ் டாஸ்க்கையும் கலந்து காக்டெயிலாக ‘டான்ஸ் மாரத்தான் 2.O’ என்று புது டாஸ்க்கை உருவாக்கிவிட்டார் பிக் பாஸ்.
நேரத்தை கணக்கிடுவதில் மக்கள் பிஸி என்பதால் சண்டையின் சத்தம் குறைவாக இருந்தது. ‘ஒரு மணி நேரம் பார்வதியை பேச வைக்காமல் இருந்ததால் இந்த டாஸ்க் சூப்பர்’ என்று எஃப்ஜே சொன்னது முற்றிலும் உண்மை.
நன்றாக மேக்கப் போட்டுக்கொண்டு, எப்போது பார்த்தாலும் எழவு வீட்டில் இருப்பது போலவே மூலையில் சோகமாக அமர்ந்திருக்கும் சான்ட்ராவின் போக்கு வீட்டில் பலருக்கும் பிடிக்கவில்லை.
ஒரு சாதாரண உரையாடலில்கூட அவர் முகம் கொடுத்து பேசாதது கனிக்கு கோபத்தைத் தந்திருக்கிறது. “அது என்னதது.. மூஞ்சியைப் பார்க்காம போறது. .. ச்சீன்னு.. சொன்னத வெச்சு சீன் போடறது?” என்று புலம்பிக் கொண்டிருந்தார்.
இன்னொரு பக்கம் சான்ட்ராவை அநாவசியமாக சமாதானம் செய்ய முயன்று கொண்டிருந்தார் வினோத். (தல உத்தியோகத்தை காப்பாத்தியாகணுமே!).
கூட நின்று கொண்டிருந்த கம்மு, கார்டன் ஏரியாவில் தன்னிச்சையாக துப்ப, அதைப் பார்த்து தலையில் அடித்துக்கொண்டார் பாரு. இதனால் கம்முவிற்கு கோபம் வந்து ‘என்ன.. நீ மட்டும் ரொம்ப சுத்தமா?’ என்று விலகிப் போய்விட்டார்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 72
வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP –72 |16/12/2025
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 71

