இலங்கை நாடாளுமன்றம் இன்று (டிசம்பர் 18) மற்றும் நாளை (டிசம்பர் 19) ஆகிய இரு தினங்கள் கூடவுள்ளதாக நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அமர்வுகளின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
-
டிசம்பர் 18 (இன்று): அண்மைய அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக 500 பில்லியன் ரூபாய் குறைநிரப்பு மதிப்பீடு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். தொடர்ந்து மாலை 5.30 மணி வரை நாட்டின் தற்போதைய காலநிலை பாதிப்புகள் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெறும்.
-
டிசம்பர் 19 (நாளை): குறித்த 500 பில்லியன் ரூபாய் குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதம் நடத்தப்பட்டு, அதற்கான அங்கீகாரம் பெறப்படும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த விசேட நாடாளுமன்ற அமர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

