நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளுக்குத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மட்டம் 3 (சிவப்பு) மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இன்று (டிசம்பர் 18) அதிகாலை 2.30 மணி முதல் நாளை (டிசம்பர் 19) அதிகாலை 2.30 மணி வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும்.
இதன்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகள் வருமாறு:
எச்சரிக்கை மட்டம் 3 – வெளியேறுங்கள் (சிவப்பு)
கீழ்க்கண்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் மண்சரிவு அபாயம் கருதி உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்:
-
கண்டி மாவட்டம்: தொலுவ, உடுதும்பற, மெததும்பற.
-
நுவரெலியா மாவட்டம்: வலப்பனை, ஹங்குரன்கெத்த, நில்தண்டாஹின்ன, மத்துரட்ட.
🟠 எச்சரிக்கை மட்டம் 2 – அவதானமாக இருங்கள் (அம்பர்)
கண்டி மாவட்டத்தின் பின்வரும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கூடுதல் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்:
-
கங்கவட்டக் கோறளை, பாதஹேவாஹெட்ட, அக்குறணை, யட்டிநுவர, தும்பனே, ஹாரிஸ்பத்துவ, பூஜாப்பிட்டிய, பஸ்பாகே கோறளை, ஹதரலியத்த, குண்டசாலை, உடுநுவர, தெல்தோட்டை, பாததும்பற, பன்வில, உடபலாத, மினிப்பே, கங்க இஹல கோறளை.
பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள மக்கள், மண்சரிவுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

