தமிழ் திரையுலகில் மிகவும் விரும்பப்படும் நட்சத்திரத் தம்பதிகளில் ஆர்யா மற்றும் சயீஷா ஜோடி முக்கியமானவர்கள். ‘கஜினிகாந்த்’ திரைப்படத்தில் இணைந்து நடித்தபோது காதலித்து மணம் புரிந்த இவர்கள், சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது பகிரும் புகைப்படங்கள் எப்போதும் வைரலாவது வழக்கம்.

ஆர்யா தற்போது ‘சார்பட்டா பரம்பரை 2’ உட்பட பல முக்கியத் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். திருமணத்திற்குப் பிறகு சயீஷா படங்களில் நடிப்பதை ஓரளவு குறைத்துக்கொண்டாலும், அவ்வப்போது தனது நடன வீடியோக்கள் மற்றும் குடும்பப் புகைப்படங்கள் மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். இவர்களுக்கு ஆரியானா என்ற அழகிய பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply