பொருளாதார மத்திய நிலையங்களில் கடந்த சில நாட்களாக மிளகாய் வகைகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் பச்சை மிளகாய் மற்றும் கறி மிளகாய் ஒரு கிலோ ரூ.1,200 வரை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக, அங்குள்ள வர்த்தக சங்கத் தலைவர் யு.பி. ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில்,

  • கறி மிளகாய்: ஒரு கிலோ ரூ.1,000

  • குடை மிளகாய்: ஒரு கிலோ ரூ.850

அதேபோல் கெப்பெட்டிபொல பொருளாதார மத்திய நிலையத்தில்,

  • பச்சை மிளகாய் மற்றும் கறி மிளகாய்: ஒரு கிலோ ரூ.1,000 – 1,200 வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

தம்புள்ளை மொத்த சந்தைக்கு தினசரி வழக்கமாக 8–10 இலட்சம் கிலோ கிராம் காய்கறிகள் கிடைக்கும் நிலையில், நேற்று மட்டும் 3–4 இலட்சம் கிலோ கிராம் மட்டுமே கிடைத்ததாகவும், தாழ்நிலப் பகுதிகளிலிருந்து வரும் காய்கறி விநியோகம் மிகக் குறைந்த அளவில் இருந்ததாகவும் ஏகநாயக்க குறிப்பிட்டுள்ளார். இதுவே விலை உயர்வுக்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

மற்ற காய்கறிகளின் மொத்த விலை நிலவரம்:

  • போஞ்சி: ஒரு கிலோ ரூ.450–500

  • தக்காளி, கத்தரிக்காய், பீட்ரூட்: தலா ஒரு கிலோ ரூ.450–500

  • கரட், லீக்ஸ்: ஒரு கிலோ ரூ.220

  • முட்டைக்கோஸ்: ஒரு கிலோ ரூ.180

  • பூசணிக்காய்: ஒரு கிலோ ரூ.80–100

காய்கறி விநியோகம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை விலை குறையும் வாய்ப்பு குறைவாகவே இருக்கும் என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

Share.
Leave A Reply