நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் பெண் பயணி ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று (19) அதிகாலை 12.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. டுபாயிலிருந்து Fly Dubai நிறுவனத்தின் FZ-569 விமானத்தில் இலங்கை வந்த குறித்த பெண், விமான நிலையத்தின் “கிரீன் சேனல்” வழியாக வெளியேற முயன்ற போது சுங்க அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் சோதனைக்குட்படுத்தப்பட்டார்.

அதன்போது, அவருடைய பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ. 3,54,000 பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண் பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply