தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல் (SIR) பணியை இந்தியத் தேர்தல் ஆணையம் கடந்த நவம்பர் 4ஆம் திகதி தொடங்கி, டிசம்பர் 14ஆம் திகதி வரை மேற்கொண்டது.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

தேர்தல் ஆணையம் இன்று தமிழகத்திற்கு ஏற்கனவே வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், இறந்தவர்கள், முகவரியில் இல்லாதவர்கள், நிரந்தரமாக குடியிருப்பது மாற்றப்பட்டவர்கள், இரட்டை பதிவுகள் போன்ற காரணங்களால் தமிழ்நாடு முழுவதும் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

  • அதிகம் நீக்கம் சென்னையில் – 14.25 லட்சம் வாக்காளர்கள்

பெயரை சரிபார்ப்பது

வாக்காளர் தங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்க்க voters.eci.gov.in இணையதளத்தில் சென்று Search Your Name in Voter List என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

3 வழிகள்:

  1. EPIC எண்ணால் தேடல்: வாக்காளர் அடையாள அட்டை எண் மற்றும் Captcha நிரப்பி சரிபார்க்கலாம்.

  2. பெயர் மற்றும் பிற விவரங்கள் மூலம்: உங்கள் பெயர், உறவினர் பெயர், பிறந்த தேதி அல்லது வயது, பாலினம், மாவட்டம், சட்டமன்ற தொகுதி உள்ளிட்டு சரிபார்க்கலாம்.

  3. மொபைல் எண் மூலம்: பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு வரும் OTP ஐ உள்ளிட்டு சரிபார்க்கலாம்.

நீக்கப்பட்டவர்கள்: காரணத்துடன் பட்டியலை https://erolls.tn.gov.in/asd/ இணையதளத்தில் பார்க்கலாம்.

பெயர் சேர்க்க / திருத்த / மாற்ற

  • படிவம் 6: உங்கள் பெயர் பட்டியலில் இல்லையெனில் சேர்க்க விண்ணப்பம். இன்று முதல் ஜனவரி 18 வரை விண்ணப்பிக்கலாம்.

  • படிவம் 8: முகவரி மாற்றம் அல்லது தொகுதி மாற்றம் செய்ய.

விண்ணப்பங்கள் voters.eci.gov.in இணையதளம் மூலமாகவும், சிறப்பு முகாம்களில் நேரில் சென்று சமர்ப்பிக்கவும் முடியும்.
பிப்ரவரி 17 ஆம் திகதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

Share.
Leave A Reply