யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் சனிக்கிழமை (20) இடம்பெற்ற விபத்தில் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மூளாய் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளும் மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது எதிர்த்திசையில் பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முயன்று மோட்டார் சைக்கிளுடன் நடு வீதியில் விழுந்துள்ளனர்.
இதன்போது எதிர்த்திசையில் பயணித்த பவுசர் ஒன்று பெண்ணின் தலையின் மீது மோதியுள்ளது. காயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

