• பிக் பாஸ் வீட்டிற்காக தான் அனுசரித்துப் போக வேண்டும் என்று எண்ணாமல், தனக்காக ஒட்டுமொத்த வீடும் அனுசரித்துப் போக வேண்டும் என்று சான்ட்ரா எண்ணுவது அபத்தமானது.
விஜய் சேதுபதியிடமிருந்து இன்னொரு ‘சவசவ’ எபிசோட். சான்ட்ராவிடம் மல்லுக்கட்டி சோர்வாகி விட்டார் விசே. இந்த எபிசோடை பார்க்கும் போது நமக்கும் அதை விட இரண்டு மடங்கு சோர்வாகி விட்டது.
‘ஒரு கிலோ எமோஷனைக் கொடுத்துடுவாங்க’ என்று வீட்டிற்குள் செல்வதற்கு முன்னால் சொன்னார் விசே. ஆனால் விசாரணையின் போது விசேவின் தலையைச் சுற்ற வைத்து இரண்டு கிலோ அல்வாவைத் தந்து விட்டார் சான்ட்ரா. விசே அவரை விசாரித்த முறையும் வலிக்காத மாதிரியே இருந்தது.
சான்ட்ராவின் பிரச்சினை என்னவாக இருக்கக்கூடும்?
பலருக்கு வீடே உலகம். சிலருக்கு உலகமே வீடு. நீங்கள் கவனித்துப் பார்த்தால், அதிகமாக பிரயாணம் செய்கிறவர்கள், சக மனிதர்களுடன் உடனே ஒத்துப் போகும் தன்மையை வளர்த்திருப்பார்கள். பயணங்களில் நிகழும் நல்ல, கெட்ட அனுபவங்கள், சக மனிதர்களுடன் பழகக்கூடிய அனுபவங்களைத் தந்திருக்கும். அதனால்தான் ‘ஆன்மீகம்’ என்கிற போர்வையில் நிறைய பயணங்களைச் செய்ய வேண்டிய வழியை முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
பொதுவாக இன்ட்ரோவொ்ட் குணாதிசயம் உள்ளவர்கள், பயணத்தில் எதிர் இருக்கையில் உள்ளவர்களை சின்னச் சின்ன காரணங்களுக்கு கூட உடனே வெறுப்பார்கள். இவர்கள் எழுந்து போய்த் தொலைக்கக் கூடாதா என்று மனமார எண்ணுவார்கள். ஒருவகையில் சான்ட்ரா அப்படிப்பட்டவரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
பிக் பாஸ் வீட்டிற்காக தான் அனுசரித்துப் போக வேண்டும் என்று எண்ணாமல், தனக்காக ஒட்டுமொத்த வீடும் அனுசரித்துப் போக வேண்டும் என்று சான்ட்ரா எண்ணுவது அபத்தமானது. அதிலும் ஒரு ரியாலிட்டி ஷோவில், சான்ட்ராவின் தூக்கத்தை கெடுக்காமல் அனைவரும் அமைதியாக உண்டு, உறங்கி எழ வேண்டும் என்று எதிர்பார்ப்பது வேடிக்கைத்தனமானது.
‘சான்ட்ரா மாதிரியே அனைவரும் இருந்தால் பிக் பாஸ் ஷோ எப்படியிருக்கும்?’
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 76
வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP –76 |20/12/2025
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? நாள் 75

