இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இன்று (23) முற்பகல் இலங்கையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்திக்கவுள்ளார்.அதே நேரத்தில், அவர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரையும் சந்திப்பார்.ஜெய்சங்கர் நேற்று பிற்பகல் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விசேட விமானத்தில் இலங்கை வந்துள்ளார்.இந்த விஜயத்தின் முக்கிய நோக்கம் டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்திய அரசாங்கத்தின் ஆதரவை உறுதிப்படுத்துவது ஆகும்முக்கிய சந்திப்புகளுக்குப் பிறகு, ஜெய்சங்கர் இன்று பிற்பகல் இலங்கையை விட்டு புறப்படும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
Related Posts
Add A Comment

