நகர சபையின் நடவடிக்கை:
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட ஹோட்டல்கள் மற்றும் உணவுகளை கையாளும் நிலையங்களில் லஞ்ச் சீட் பாவனை முற்றாக தடை செய்யப்படவுள்ளது.

ஆமல் தேதி:
இந்த தடையானது 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளக்கம்:
ஹோட்டல்கள் மற்றும் உணவுப் பொருட்களைக் கையாளும் நிலையங்களின் உரிமையாளர்களுடன் கலந்துரையாடலின் போது, பருத்தித்துறை நகரசபை பொதுச்சுகாதார பரிசோதகர் ப.தினேஷ் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

சட்ட நடவடிக்கை:

இந்த அறிவிப்பை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.வியாபார நிலையங்களின் வியாபார உரிமம் நகரசபையின் அதிகாரத்தின் கீழ் இடைநிறுத்தப்படலாம்.

மாற்று ஆலோசனை:

லஞ்ச் சீட் பாவனைக்கு பதிலாக, உணவு பொதியிடும்போது வாழை இலை, தாமரை இலை, தேக்கம் இலை போன்ற இயற்கை தட்டுகள் மற்றும் ஈயா பேப்பர் போன்ற அனுமதிக்கப்பட்ட கொள்கலன்களை பயன்படுத்துமாறு வியாபாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply