“என் ஆங்கிள்ல ஒரு நிமிஷமாச்சும் நீ யோசிச்சிருக்கியா.. எப்பப் பாரு உன்னைப் பத்தி மட்டுமே யோசிக்கற” என்று கம்மு புலம்பியதும் உண்மை.
‘இருக்கு.. ஆனா இல்ல…’ இது S.J.சூர்யாவின் பிரபலமான காமெடி.
பிக் பாஸ் வீட்டில், பாரு – கம்மு காதலும் இப்படித்தான் இருக்கிறது.
இது ‘சீரியஸ் ரிலேஷன்ஷிப்’ என்று காட்டிக்கொள்ள இருவரும் படாதபாடு படுகிறார்கள். இந்த நடிப்பில் பாரு முன்னணியில் இருக்கிறார்.
இருவருக்குமே நன்றாகத் தெரியும், இந்த socalled காதல், சீசன் முடிந்தவுடன் உடைந்து விடும் என்று. ஆனால் கன்டென்ட் தந்தால்தானே சர்வைவ் ஆக முடியும்? கம்முவை விடவும் பாரு இதை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார்.
பாருவிற்கும் கம்முவிற்கும் காதல் காலக்கட்டம் முடிந்து தீவிரமான ஊடல் பீரியட் ஆரம்பித்திருக்கிறது. எனவே உக்கிரமான உரசல்கள் நிகழ்கின்றன.
“நம்ம ரிலேஷன்ஷிப் வெளியே செட் ஆகலைன்னாலும்.. இது ஒரு டாக்குமென்ட்” என்று கம்முவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் பாரு. இவர்களின் காவியக் காதலை வருங்கால வரலாற்றுப் புத்தகங்களில் பாடமாக வைப்பார்கள் என்று பாரு நினைக்கிறார் போலிருக்கிறது..
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 78
வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP –78 |22/12/2025
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? நாள் 77

