கிறிஸ்மஸ் பண்டிகை, பாடசாலை விடுமுறை மற்றும் வருட இறுதி நீண்ட விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக விசேட தொடருந்து சேவைகளை முன்னெடுக்க தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இந்த விசேட நேர அட்டவணை விபரங்கள் வருமாறு:
-
மருதானை – மாத்தறை சேவை: இன்று (24.12.2025) பிற்பகல் 3:00 மணிக்கு மருதானையிலிருந்து மாத்தறை நோக்கி விசேட கடுகதி தொடருந்து பயணிக்கவுள்ளது.
-
மறுமார்க்கம்: இந்தத் தொடருந்து எதிர்வரும் 29-ஆம் திகதி காலை 5:00 மணிக்கு மாத்தறையிலிருந்து புறப்பட்டு, காலை 8:30 மணிக்கு கொழும்பு கோட்டையை வந்தடையும்.
-
யாழ்ப்பாணத்திற்கான சொகுசு சேவை: கொழும்பு கோட்டை மற்றும் காங்கேசன்துறை இடையே நகரங்களுக்கிடையிலான (Intercity) விசேட தொடருந்து சேவை எதிர்வரும் டிசம்பர் 25 மற்றும் 28 ஆகிய திகதிகளில் முன்னெடுக்கப்படும்.
-
வசதிகள்: காங்கேசன்துறைக்கான இந்தத் தொடருந்து 9 முதலாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டிகளைக் (AC Compartments) கொண்ட சொகுசு சேவையாக அமையவுள்ளது.
விடுமுறை காலத்தில் ஏற்படும் சனநெரிசலைக் குறைக்கவும், பயணிகள் தங்களது ஊர்களுக்குச் சிரமமின்றிச் செல்லவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

