அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றபோது முதல் காலத்திலிருந்தே அண்டை நாடுகளை வரி, கருத்து முறையில் தொடர்ந்த அச்சுறுத்தல்களை நிகழ்த்தி வந்த டொனால்ட் ட்ரம்ப், மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் உலக சுதந்திரத்திற்காக கிரீன்லாந்து மீதான உரிமை, கட்டுப்பாடு அவசியம் எனக் கூறி, டென்மார்க்கிடம் இருந்து கிரீன்லாந்தை வாங்கவேண்டும் என்று அவர் பரபரப்பான கருத்தை வெளியிட்டுள்ளார்.

ட்ரம்ப் கூறியபடி, கிரீன்லாந்தில் ஏராளமான கனிம வளங்கள் குவிந்து கிடக்கின்றன, எனவே சீனாவுடன் போட்டியில் அந்த பகுதியை கைப்பற்ற அமெரிக்கா முயற்சி செய்ய வேண்டும்.

அதன்படி, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்காக கிரீன்லாந்து பகுதி நிச்சயமாக வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார். மேலும், டென்மார்க் நாட்டின் கிரீன்லாந்து பகுதிக்கு தனி தூதரை நியமித்து, அந்த பகுதி அமெரிக்காவுக்கு நிச்சயமாக கிடைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply