வவுனியா மடுக்கந்த பகுதியில் காணி ஒன்றில் கஞ்சா செடியை பயிரிட்டு வளர்த்துவந்த ஒருவரை வவுனியா தலைமை பொலிஸ்நிலைய போதைத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இந்த கைது இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்திலிருந்து கஞ்சா செடி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது, அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சந்தேக நபரை எதிர்வரும் நாட்களில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கைது நடவடிக்கை வவுனியா தலைமை பொலிஸ்நிலையத்தின் பொறுப்பதிகாரியின் வழிநடத்தலின் கீழ் போதைத்தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டது.

