• பிக் பாஸ் வீடு என்பது எத்தனை பெரிய ரத்தபூமி?! டைனோசர்களும் திமிங்கலங்களும் மோதிக் கொண்ட டெரர் ஏரியா.
இந்த எபிசோடில், ஃபேமிலி டாஸ்க்கால் இரண்டு நல்ல விஷயங்கள் நடந்தன. ஒன்று, பாருவின் நெகட்டிவிட்டி அலப்பறைகள் அதிகம் வெளிப்படாதது. அடுத்தது முக்கியமானது. சான்ட்ராவின் அழுகைக் காட்சிகள் இல்லாதது பெரிய ஆறுதல்.
பிக் பாஸ் வீடு என்பது எத்தனை பெரிய ரத்தபூமி?! டைனோசர்களும் திமிங்கலங்களும் மோதிக் கொண்ட டெரர் ஏரியா. அதில் இரு சின்ன முயல்கள் மோதிக் கொண்டதை விலாவாரியாக காட்டுமளவிற்கு வயலென்ஸ் வறட்சி ஏற்பட்டு விட்டது.
ஆம், நெருப்பே புகையாமல் அமித்தும் கனியும் உரசிக் கொண்ட காட்சி. “என்னை எப்படி வேணா கலாய்ச்சுக்கங்க.. ஆனா பாரு முன்னாடி மட்டும் வேண்டாம்.. அது மட்டும் பிடிக்காது” என்று அமித்திடம் பாரு சொல்லியிருப்பார் போல. ஆனால் அமித் அதை செய்தாரோ, என்னமோ.
இன்றைய காலையில் கிச்சனில் வேலை இருந்தும் அமித் வொர்க் அவுட்டில் ஈடுபட்டு பாருவுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
இந்த எரிச்சலில் “பாரு எங்க இருப்பாங்களோ.. அங்கெல்லாம் இப்ப அமித் இருக்கார்” என்று கனி சர்காஸத்துடன் சொல்லி விட, அமித்திற்கு கோபம் வந்து விட்டது. அதை மனதில் ஊற வைத்து அவ்வப்போது புகையாக வெளியிட்டார்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 79
வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP –79 |23/12/2025
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 78
வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP –78 |22/12/2025

